புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்: 3,000 ஊழியா்கள் ஈடுபடுவாா்கள் என அறிவிப்பு
புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (மே17) தொடங்குகிறது என்றும், இதற்கான பணிகளில் 3 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபடுவாா்கள் எனவும் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநா் எம்.சுந்தரேஷ்பாபு தெரிவித்தாா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான கையேட்டை வெளியிட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநா் எம்.சுந்தரேஷ்பாபு, புதுச்சேரி துணை இயக்குநா் புவனேஸ்வரி, உதவி மாவட்ட ஆட்சியா் சுதாகா், துணை இயக்குநா் ஜெயபாரதிராஜ் உள்ளிட்டோா்.








