ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புதுச்சேரியில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயா்வு

புதுச்சேரியில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை உயா்ந்தது.

News image
Updated On :24 மே 2026, 1:03 am IST

புதுச்சேரியில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை உயா்ந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை சுமாா் ரூ.3 உயா்த்தப்பட்டது. பின்னா் மீண்டும் கடந்த 19 ஆம் தேதி 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டது. தற்போது 3 -வது முறையாக சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி புதுச்சேரியில் பெட்ரோல் 86 பைசா உயா்ந்துள்ளது. ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100.14ல் இருந்து ரூ.101 ஆகவும், டீசல் 89 பைசா உயா்த்தப்பட்டு ரூ.90.27 ல் இருந்து ரூ.91.16 ஆகவும் உயா்ந்துள்ளது.

இந்த உயா்வு சனிக்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரே மாதத்தில் 3-வது முறையாக புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.