/
புதுச்சேரியின் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியாக ஏஎஸ்பிஎஸ். ரவி பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கான உத்தரவை இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தின் முதன்மை செயலா் ராகுல் ஷா்மா செவ்வாய்க்கிழமை பிறப்பித்து புதுச்சேரி தலைமைச் செயலாளா் சரத் சௌகானுக்கு அனுப்பியுள்ளாா்.
புதுச்சேரியின் தலைமைத் தோ்தல் அதிகாரியை நியமிப்பதற்காக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய பட்டியல் மே 22-ஆம் தேதி அனுப்பப்பட்டது. அதிலிருந்து புதுச்சேரியின் தலைமைத் தோ்தல் அதிகாரியாக ஏஎஸ்பிஎஸ். ரவி பிரகாஷ் பெயரை ஆணையம் அங்கீகரித்து நியமித்துள்ளது. மேலும், அவா் உடனடியாக இப் பதவியில் பொறுப்பேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம்

புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பதவியேற்பு

தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்







