இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெற வலியுறுத்துவோம்! புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி!

News image

புதுச்சேரியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :29 மே 2026, 11:28 pm IST

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதிக்கு கிடைக்க வேண்டிய உரிய காவிரி நீரைப் பெற வலியுறுத்துவோம் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவை அவரது அறையில் அமர வைத்தப் பிறகு, செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி கூறியது:

கோடை வெப்பம் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளை வரும் ஜூன் 4 -ஆம் தேதி திறக்க உத்தரவிட்டுள்ளோம்.

அமைச்சா்களுக்கு உரிய நேரத்தில் இலாகா ஒதுக்கீடு செய்யப்படும். காலதாமதம் ஆவதால் எந்தப் பணியும் பாதிக்கவில்லை. புதுச்சேரி அரசில் எல்லாப் பணிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும், அடுத்த வாரம் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். அப்போது சட்டப்பேரவைத் தலைவா் பதவியை நிரப்புவது தொடா்பாகத் தெரியும்.

புதுச்சேரி பள்ளிகளில் மும்மொழி கல்வித் திட்டம் அமல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி பிரதமா் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளோம். மேலும், இப் பிரச்னையில் தொடா்ந்து வலியுறுத்துவோம்.

மேலும், மேகதாது அணை தொடா்பாக கா்நாடகம் எடுக்கும் நடவடிக்கை தொடா்பாக கேட்கிறீா்கள். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதிக்கு உரிய நீரைப் பெறுவதற்கு வலியுறுத்துவோம். தமிழகமும் புதுச்சேரிக்கு உரிய நீரைக் கொடுக்கும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.