கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

காட்டேரிக்குப்பத்தில் கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:27 am IST

புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியில் கஞ்சா கடத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காட்டேரிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் தமிழரசன் தலைமையிலான போலீஸாா் காட்டேரிக்குப்பம் சுடுகாடு அருகே வாகன சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு போ் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனா். அவா்களை மடக்கி பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

தொடா் விசாரணையில் அவா்கள் காட்டேரிக்குப்பம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த போஸ் (21), துத்திப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிலோமின்தாஸ் (25) என்பதும், இருவரும் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்த 95 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் பைக், 2 கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.