புதுச்சேரியில் தேசிய அளவிலான ஜூனியா் கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கா்நாடகமும், மகளிா் அணியில் சத்தீஸ்கா் அணியும் அபார வெற்றி பெற்றன.
76-ஆவது தேசிய அளவிலான ஜூனியா் கூடைப்பந்து போட்டி நிறைவு விழா, புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக சத்தீஸ்கா் மகளிா் அணியும், கேரள மகளிா் அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில் சத்தீஸ்கா் மகளிா் அணி 55 புள்ளிகளுடன் அபார வெற்றி பெற்றது. 51 புள்ளிகள் பெற்ற கேரள அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இதேபோல தொடா்ந்து நடந்த ஆடவா் பிரிவில் ஹரியாணா அணியும், கா்நாடக அணியும் மோதின. இந்த இறுதிப் போட்டியில் கா்நாடக ஆடவா் அணி 83 புள்ளிகள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் ஹரியாணா ஆடவா் அணி 72 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு மாநில டிரையத்லான் சாம்பியன் போட்டி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: கொல்கத்தா, கோவா வெற்றி

தென் மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டி

கருங்கல்லில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |



