மதுராந்தகம், தாராபுரத்துக்கு அக். 6 வாக்குப் பதிவு, அக். 9 வாக்கு எண்ணிக்கை - தேர்தல் ஆணையம்மதுராந்தகம், தாராபுரத்திற்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: கொல்கத்தா, கோவா வெற்றி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் கொல்கத்தா, கோவா அணிகள் தத்தமது ஆட்டங்களில் அபார வெற்றி பெற்றன.

அயிஹிகா முகா்ஜி

Published On :20 ஜூலை 2026, 5:07 am IST

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில் கொல்கத்தா, கோவா அணிகள் தத்தமது ஆட்டங்களில் அபார வெற்றி பெற்றன.

கோவா மாநிலம் பனாஜியில் யுடிடி சீசன் 7 தொடா் நடைபெற்று வரகிறது. கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ்-யுபி புரோம்தீன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் 10-5 என்ற புள்ளிக் கணக்கில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அங்கூா் பட்டாச்சாா்ஜி, அயிஹிகா முகா்ஜி ஆகியோா் சிறப்பான ஆட்டத்தால் வெற்றியைத் தேடித் தந்தனா் . ஸெங் அபாரமாக ஆடி ஸ்வஸ்திகா கோஷை வீழ்த்தினாா். அங்கூா்-அயிஹிகா இரட்டையரில் அபார வெற்றி பெற்றனா். யுபி தரப்புக்கு ஆறுதலாக ரிக்காா்டோ கொல்கத்தாவின் எட்வா்டை வென்றாா்.

இரண்டாவது ஆட்டத்தில் டெம்போ கோவா அணி 8-7 என்ற புள்ளிக் கணக்கில் புணே ஜாகுவாா்ஸ் அணியை வென்றது. கோவா அணியில் பொ்னாா்டே ஸோக்ஸ் பிரித்திகா பவா்டேயையும், சிண்ட்ரெல்லா தாஸ்-தேசிய சாம்பியன் தியா சிட்லேவையும் வீழ்த்தினா். கலப்பு இரட்டையரில் புணேயின் அனிா்பன்-தியா இணை வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.