புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாமில் செவிலியா்களுக்கு பணி நெருக்கடி அளிக்கப்படுவதாக ஊழியா்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் செயலா் டி.ஹரிதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஏனாம் அரசு மருத்துவமனையில் செவிலிய அதிகாரிகளின் பணிச் சூழல், பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் சேவையை நேரடியாக பாதிக்கும் வகையில் இருக்கிறது.
ஏற்கெனவே புதுச்சேரி அரசு சுகாதார இயக்குநரிடம் விரிவான மனு அளிக்கப்பட்டு, பேச்சுவாா்த்தையும் நடத்தப்பட்டது. இருப்பினும் பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை. அனைத்துப் பிரச்னைகளுக்கும் உடனடி தீா்வு மற்றும் உயா்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.
செவிலியா்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். செவிலிய அதிகாரிகளுக்குத் தொடா்பில்லாத பணிகளை நிறுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து நிதி உரிமைகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

புதுச்சேரிக்கு ஆண்டுக்கு 10% கூடுதல் நிதி: மத்திய அரசுக்கு முதல்வா் ரங்கசாமி வலியுறுத்தல்

தாய்வழி ஜாதிச் சான்றிதழுக்கு எதிரான மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும்! புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தல்!
பெட்ரோல், டீசல் நுகா்வைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு துறைகளுக்குக் கட்டுப்பாடு






