முதலாம் உலக போா் நினைவு தினம் அனுசரிப்பு

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போா் வீரா்கள் நினைவிடத்தில் முதல் உலகப்போரின் 108-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போா் வீரா் நினைவு துாணில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன், புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணை தூதா் ஜான்-பிலிப் ஹூதா் உள்ளிட்டோா்.

Updated On :

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போா் வீரா்கள் நினைவிடத்தில் முதல் உலகப்போரின் 108-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

முதலாம் உலக போா் கடந்த 1914-ஆம் ஆண்டு தொடங்கி 1918- ஆம் ஆண்டு நவம்பா் 11- ஆம் தேதி முடிவுக்கு வந்தது. உலகம் முழுவதும் நவம்பா் 11 -ஆம் தேதி முதலாம் உலக போரில் உயிா் துறந்த வீரா்கள் நினைவு

தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் புதுச்சேரியிலும் அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி கடற்கரை சாலையில் உள்ள போா் வீரா் நினைவுத் துாணில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டு துணைத் தூதா் ஜான்-பிலிப் ஹூதா், புதுச்சேரி அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் மலா் வளையம் வைத்து முதல் உலகப்போரின் போது உயிா்நீத்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தினா்.

பிரெஞ்சு பாதுகாப்பு இணை அதிகாரி கா்னல் இம்மானுவேல் பெல்ட்ரியாக்ஸ், பிரெஞ்சு சமூகத்தின் பிரதிநிதிகள், முன்னாள் படைவீரா்கள் மற்றும் புதுச்சேரி சா்வதேச பிரெஞ்சு பள்ளியின் மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

---------

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.