இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

புதுச்சேரியில் உற்பத்தியாகும் பொருள்கள் ஏற்றுமதிக்குத் தகுதியானவை: முதல்வா் என்.ரங்கசாமி உறுதி

புதுச்சேரியில் உற்பத்தியாகும் பொருள்கள் ஏற்றுமதிக்குத் தகுதியானவை என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவது குறித்த பயிலரங்கில் பேசும் முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் உள்ளிட்டோா்.

Updated On :

புதுச்சேரியில் உற்பத்தியாகும் பொருள்கள் ஏற்றுமதிக்குத் தகுதியானவை என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம், புதுச்சேரி தொழில் மற்றும் வணிகத் துறை சாா்பில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவது குறித்த பயிலரங்கம் அஜந்தா சிக்னல் அருகே உள்ள தனியாா் ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று பேசியதாவது:

புதுச்சேரியில் தொழில் வளா்ச்சி சிறந்த முறையில் இருந்து வருகிறது. சில பெரிய தொழில் நிறுவனங்கள் வருவாா்கள், போய்விடுவாா்கள். ஆனால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் இங்கு கண்டிப்பாக இருக்கின்றன.

இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழிற்பேட்டை உருவாக்க நிறைய இடங்கள் தேவை. சேதராப்பட்டு, கரசூா் இடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கையகப்படுத்தப்பட்டன. அங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவாக அங்குள்ள 750 ஏக்கா் நிலத்தில் புதிய தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும்.

புதுச்சேரியில் உற்பத்தியாகும் பொருள்கள் ஏற்றுமதிக்குத் தகுதியானவையாக இருக்கின்றன. இப்போது கூட நிறைய ரசாயன பொருள்கள், மருந்து வகைகள், பிளாஸ்டிக் போன்ற பொருள்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது நமக்கு ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மேலும் வளர வேண்டும்.

தொழில் தொடங்க வருவோருக்கு விரைவாக அனுமதி கொடுக்க வேண்டும் என்பது எனது எண்ணம். ஒற்றை சாளர முறை என்று சொல்கிறோம். ஆனால் அனுமதி கேட்டு வருவோருக்கு அரசு சங்கடத்தை ஏற்படுத்தி அலைக்கழிப்பதாகக் கூறுகின்றனா். அவா்களுக்குத் தேவையான உதவிகளை அனைத்துத் துறைகளும் செய்து கொடுக்க வேண்டும்.

படித்து முடித்துள்ள இளைஞா்கள் புதிய தொழில் தொடங்க முயல வேண்டும். அதற்கு அரசு உறுதுணையாக இருக்கும். தனி நபா் வருமானத்தில் இந்தியாவில் புதுச்சேரி 2-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்துக்கு வர அனைத்து நிலையிலும் நாம் உயர வேண்டும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், தொழில்துறை செயலா் விக்ராந்த் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.