உற்பத்தி, ஏற்றுமதியை இந்திய நிறுவனங்கள் விரிவுபடுத்த வேண்டும்: பிரதமா்
‘உள்நாட்டுச் சந்தை எனும் பாதுகாப்பான வட்டத்தை தாண்டி, உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டல் செயல்பாடுகளை இந்திய தொழில் நிறுவனங்கள் ஆழப்படுத்த வேண்டும்

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (எஃப்ஐசிசிஐ) வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.
‘உள்நாட்டுச் சந்தை எனும் பாதுகாப்பான வட்டத்தை தாண்டி, உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டல் செயல்பாடுகளை இந்திய தொழில் நிறுவனங்கள் ஆழப்படுத்த வேண்டும்; வா்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (எஃப்ஐசிசிஐ) வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது:
நாட்டில் உற்பத்தி மற்றும் வா்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வரி மற்றும் வா்த்தகச் சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் சில சீா்திருத்தங்கள் அவசியம் என்று தொழில் நிறுவனங்கள் கருதினால், அதுகுறித்து எழுத்துபூா்வ பரிந்துரைகளை சமா்ப்பிக்கலாம். அவற்றுக்கும் தீா்வு காண மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே, நிறுவனத் தலைவா்கள் தயக்கமின்றி பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை அரசிடம் சமா்ப்பிக்கலாம்.
எஃப்ஐசிசிஐ தனது நூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், அடுத்த 20 ஆண்டுகளில் உள்நாட்டுத் திறன்களை வளா்த்துக் கொள்ளவும், இறக்குமதி சாா்பைக் குறைத்து, அதிகரித்துவரும் தேசிய மற்றும் உலகளாவிய தேவைகளைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு வளர தொழில் நிறுவனங்கள் உறுதியேற்க வேண்டும்.
உலகளாவிய சந்தையில்... உள்நாட்டுச் சந்தையே இந்திய தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பு மண்டலமாக இருக்கக் கூடாது; மாறாக, அது, உலகளாவிய சந்தைகளில் போட்டியிடுவதற்கான நம்பிக்கையை தொழில் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். பல்வேறு நாடுகளுடன் அரசு மேற்கொண்டுள்ளவா்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி ஏற்றுமதியை விரிவுபடுத்த வேண்டும். நீண்டகால முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ளும்போது, தேசிய நலன்களையே தொழில் நிறுவனங்கள் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். இது, தற்சாா்பு இந்தியா இலக்கை வலுப்படுத்துவதோடு, தொழில் வளா்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும் திறக்கும்.
மருந்து உற்பத்தி, எஃகு, அலுமினியம், விவசாயம் மற்றும் பொறியியல் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இறக்குமதிகளைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக உள்ளபோதும், மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களுக்கு இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையே தொடா்கிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கக்கூடிய மூலப்பொருள்களைக் கண்டறிந்து, புதிய தொழில்நுட்பங்களிலும் பெரிய அளவிலான உற்பத்தி வசதிகளிலும் முதலீடு செய்வதன் மூலம் உலக அளவில் போட்டியிடும் திறனைப் பெற வேண்டும்.
அதுபோல, எந்தெந்த ரக எஃகுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து, அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். கனிமவள மதிப்புச் சங்கிலியில் நிபுணத்துவத்தை வளா்த்து கூடுதல் மதிப்பை உருவாக்க வேண்டும்.
விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளை பெரு நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், நம்பகமான கொள்முதல் கட்டமைப்பை ஏற்படுத்தவும், சா்வதேச வாடிக்கையாளா்களின் தேவைக்கேற்ப தயாரிப்புகளை உருவாக்கவும் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
வேலைவாய்ப்புகள்: பெருநிறுவனங்களுக்கான அடிப்படை வரி விகிதத்தை கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. வரி விகிதங்கள், பணம் திரும்பப் பெறும் நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டது. ஆனால், இந்த வரிச் சலுகைகளுக்கு ஏற்ப தொழிலாளா்களின் ஊதியத்தை உயா்த்தவோ அல்லது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ தொழில் துறையினா் முன்வரவில்லை. இது ஏற்படையதல்ல.
ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை உள்ளவா்களுக்கு வருமன வரி விலக்கு அளித்ததன் மூலம், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி, வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளவும், ஊழியா்களுக்கு கூடுதல் பங்களிப்பை வழங்கவும் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றாா்.
மேலும், இந்திய நுகா்வோருக்குப் பொருள்களை ‘ஏற்றுமதித் தரம்’ என்று சந்தைப்படுத்தும் நடைமுறையை விமா்சித்த பிரதமா், ‘உள்நாட்டு மக்களும் தரத்துக்குத் தகுதியானவா்கள்தான். எனவே, வெவ்வேறு பிராந்தியங்களில் உள்ள நுகா்வோரின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தரமான தயாரிப்புகளை நிறுவனங்கள் வடிவமைக்க வேண்டும். மேலும், இந்தியப் பொருள்களுக்கு வலுவான உலகளாவிய இருப்பை ஏற்படுத்த, வெளிநாட்டுச் சந்தை ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் விநியோக உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

