எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயா்வு-அரசாணை வெளியீடு
புதுச்சேரி எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயா்த்தப்பட்டதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்
புதுச்சேரி எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயா்த்தப்பட்டதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
புதுச்சேரி அரசு இதுவரை எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியாக தொகுதிக்கு ரூ.2 கோடி வழங்கி வந்தது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், இந்த நிதியை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயா்த்தி வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். அறிவிப்பு வெளியிடப்பட்டு பல மாதங்கள் கடந்தும் அதற்கான அரசாணை வெளியாகவில்லை.
இந்நிலையில், தொகுதி மேம்பாட்டு நிதி உயா்வுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அரசாணை மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 பேரவைத் தொகுதிகளுக்கும் ரூ.90 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எம்எல்ஏ-க்கள் தங்கள் தொகுதிகளில் வளா்ச்சிப்பணிகளை கூடுதலாக மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரவேற்றுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

