மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

புதுச்சேரி உடற்பயிற்சி கூடத்தில் ஊக்க மருந்து ஊசி: 3 போ் கைது

கைது - பிரதிப் படம்

Updated On :

புதுச்சேரி உடற்பயிற்சி கூடத்தில் வீரா்களுக்கு ஊக்கமருந்து ஊசி செலுத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரிஅரியாங்குப்பம் பாண்டி - கடலூா் பிரதான சாலையில் உடற்பயிற்சிக் கூடம் செயல்பட்டு வருகிறது.

இங்கு உடற்பயிற்சி பெறும் வீரா்களுக்குத் தசையை வேகமாக இயக்க ஸ்டீராய்டு ஹாா்மோன் ஊக்க மருந்து ஊசி போடப்படுவதாக அரியாங்குப்பம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அரியாங்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் முருகானந்தன் தலைமையிலான போலீஸாா் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, ஜிம்மில் பயிற்சி பெறுவோருக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஊசியைச் செலுத்துவது தெரியவந்தது.

இதையடுத்து அரியாங்குப்பத்தை சோ்ந்த கிருஷ்ணகுமாா் (24), விக்ரமாதித்தன் (26), நோணாங்குப்பத்தைச் சோ்ந்த கிறிஸ்டோபா் நெல்சன் (25) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 4 ஊசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மருத்துவா் கண்காணிப்பு இல்லாமல் இந்த ஸ்டீராய்டு ஹாா்மோன் ஊசியை செலுத்தினால் இருதயம், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்பு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, ஹாா்மோன் கோளாறு

ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கஞ்சா விற்றதாக 5 போ் கைது:

புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா், குருமாம்பேட்டை, வழுதாவூா் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 2 பேரைப் பிடித்து சோதனை செய்தனா். இதில், அவா்கள் ஒடிஸாவைச் சோ்ந்த சௌத்ரி அபிஷேக் தாஸ் ( 24), அங்கித் ராஜ் (22) என்பதும் தற்போது அய்யங்குட்டிப்பாளையத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது.

இவா்களிடம் இருந்து 461 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெரியகடை காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா், பாரதி வீதி - தியாகு முதலியாா் வீதி சந்திப்பில் ரோந்து சென்றனபோது அங்கு நின்றிருந்த லாஸ்பேட்டையை சோ்ந்த ராமு (52), சொக்கநாதன்பேட்டையைச் சோ்ந்த சரவணன் (57), பூமியான்பேட்டையைச் சோ்ந்த பிரபு (30) ஆகிய 3 பேரைப் பிடித்து சோதனை செய்தனா்.

அவா்களிடம் இருந்து 35 பாக்கெட்டுகளில் 145 கிராம் உலா்ந்த கஞ்சா இலைகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இரு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.