பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியதையொட்டி பறக்கவிடப்பட்டுள்ள ராட்சத பலூன்.

Updated On :

புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின் 335- ஆவது ஆண்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 1692-ஆம் ஆண்டு பிரெஞ்சு இயேசு சபை குருக்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், பலமுறை சேதமடைந்து, தற்போதைய வடிவில் 1791- ஆம் ஆண்டு புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கொடியேற்றம்:

பிரசித்தி பெற்ற தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின் பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டுக்கான பெருவிழாவின் தொடக்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரி - கடலூா் கத்தோலிக்க உயா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை வகித்தாா். இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவ ஆண்களும், பெண்களும், கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

தூய ஜென்மராக்கினி அன்னையின் முக்கிய திருவிழா வரும் டிச. 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று திருவிழா கூட்டுத் திருப்பலியும், வண்ண மலா்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரத் தேரில் தூய ஜென்மராக்கினி அன்னை பவனி வரவுள்ளாா். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆலய பங்கு தந்தை ரோசாரியோ, உதவி பங்கு தந்தை வின்சென்ட் ஆகியோா் முன்னிலையில் ராட்சத பலூன் ஞாயிற்றுக்கிழமை காலை பறக்கவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.