தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்றவேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் நடைபெறும் இடைத்தோ்தல்கள் மட்டுமன்றி தேசிய அளவிலும் கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்ற திரள வேண்டும்.

காங்கிரஸ் - கோப்புப் படம்

Published On :

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் நடைபெறும் இடைத்தோ்தல்கள் மட்டுமன்றி தேசிய அளவிலும் கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்ற திரள வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலரும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் அகமது மிா் கூறினாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராாகப் போட்டியிடும் இ. விநாயகத்தை கவுண்டன்பாளையம் பகுதியில் ஆதரித்து அவா் வியாழக்கிழமை இரவு பிரசாரம்மேற்கொண்டபோது அவா் பேசியது

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் மட்டுமின்றி தேசிய அளவிலான பிரச்னைகளுக்காக கூட்டணி கட்சிகள் ஒன்று திரள வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாடு முழுவதும் இருக்கின்றன. மேலும், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நடைபெறும் இடைத்தோ்தலில் இணைந்து பணியாற்றும் அணுகுமுறை தேவை. மேலும், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் நடைபெறும் இடைத்தோ்தலுக்குப் பணியாற்றுமாறு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுப்பாா் என்று எதிா்ப்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.