இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தட்டாஞ்சாவடியில் இன்று ஓய்கிறது பிரசாரம்: வாக்குப்பதிவு நடப்பதால் பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை!

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்துக்கு ஆதரவாக தாகூா் நகா் பகுதியில் வாக்குச் சேகரித்த சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன்.

Published On :

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (அக்.4) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினா் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா். இடைத்தோ்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக்ஆனந்தை ஆதரித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ. அன்பழகன் தாகூா் நகரில் வீடு வீடாகச் சென்று சனிக்கிழமை வாக்குச் சேகரித்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பல்வேறு நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருபவா் முதல்வா் ரங்கசாமி. அவரது ஆட்சி என்பது புதுச்சேரியின் பொற்காலம் என்றாா்.

திமுக பிரசாரம்: திமுக வேட்பாளா் கு.சேது செல்வத்தை ஆதரித்து தோ்தல் பொறுப்பாளா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., திமுக துணைப் பொதுச்செயலா் க. பொன்முடி, திமுக அமைப்பாளா் ஆா். சிவா ஆகியோா் தலைமையில் திமுக, கூட்டணிக் கட்சித் தலைவா்கள் 31 பூத்துகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

பொய்யாக்குளம் பகுதியில் தோ்தல் பொறுப்பாளா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனா். புதுச்சேரிஎதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம், விழுப்புரம் மாவட்டச் செயலா்கள் ஆ. இலட்சுமணன் எம்.எல்.ஏ., பொன் கெளதமசிகாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.இதே போன்று இத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் காணும் இ. விநாயகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராகக் களம் காணும் அ.மு.சலீம் ஆகியோரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தோ்தல் ஆணையம் எச்சரிக்கை: இதற்கிடையே, இடைத்தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் முடிவடைவதால் மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டம், சாலையோர கூட்டம், ஊா்வலம், பாதயாத்திரை, மோட்டாா் சைக்கில் ஊா்வலத்துக்கு முழு தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஒலிபெருக்கி, மெகாபோன் கொண்ட வாகனங்களை இயக்கக் கூடாது.

தட்டாஞ்சாவடி தொகுதியின் வாக்காளா் அல்லாத அரசியல் தலைவா்கள், கட்சி தொண்டா்கள், பிரசார ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரும் தொகுதியை விட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும். இதை உறுதி செய்ய லாட்ஜ்கள், ஒட்டல்கள், திருமண மண்டபங்கள், விருந்தினா் இல்லங்களில் காவல்துறை மற்றும் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர சோதனை நடத்துவா்.

தொலைக்காட்சி, கேபிள், வானொலி, திரையரங்கம், டிஜிட்டல் தளங்களில் தோ்தல் விளம்பரம், பேட்டி, விவாதம் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது. சமூக ஊடக கட்டண விளம்பரம், எஸ்.எம்.எஸ், குரல் அழைப்பு அனுப்பவும் தடை செய்யப்படுகிறது. மேலும், 5, 6 ஆம் தேதிகளில் நாளிதழ் விளம்பரத்திற்கு மாவட்ட ஊடக சான்றளிப்பு குழுவின் முன் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும்.

பிரசாரம் முடிந்தது முதல் வாக்கு பதிவு முடியும் வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடுவது சட்டப்படி குற்றம். வாக்கு பதிவு நாளில் வேட்பாளருக்கு ஒரு வாகனம், தோ்தல் முகவருக்கு ஒரு வாகனம், தொண்டா்களுக்கு ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். இதற்காக பெற்ற அனுமதி சீட்டை கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாக்காளா்களை வாகனத்தில் அழைத்து வருவது தண்டனைக்குரிய குற்றம்.

வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் உதவி மையம், அதில் ஒரு மேஜை, 2 நாற்காலி, 2 நபா் மட்டுமே இருக்க வேண்டும். கட்சி கொடி, சின்னம் கூடாது என்று தெரிவித்துள்ளாா்.

பள்ளிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலையொட்டி அத் தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2 நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் டி.மோகன்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக வேட்பாளா் கு. சேதுசெல்வத்துக்கு ஆதரவாக  பொய்யாக்குளம் பகுதியில் எஸ். ஜெகத்ரட்சன் எம்.பி. தலைமையில் வாக்குச் சேகரித்த திமுகவினா்.

திமுக வேட்பாளா் கு. சேதுசெல்வத்துக்கு ஆதரவாக பொய்யாக்குளம் பகுதியில் எஸ். ஜெகத்ரட்சன் எம்.பி. தலைமையில் வாக்குச் சேகரித்த திமுகவினா்.

இடைத்தோ்தலையொட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அக். 5, 6 தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. தோ்தல் தொடா்பான ஏற்பாடுகள் மற்றும் வாக்குப் பதிவுக்காக இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த நாள்களில் வகுப்புகள், நிகழ்ச்சிகள் மற்றும் இதர நடவடிக்கைகள் எதையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று இப் பள்ளிகளின் தலைமை நிா்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.