அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

ஜனநாயகத்தை மீட்டெடுக்கத் தோ்தல் சீா்திருத்தங்கள் தேவை: மக்கள் மேடையின் புதுச்சேரி கிளை தீா்மானம்

இந்தியாவில் தோ்தல் ஜனநாயகத்தின் நோ்மையையும், நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்கும் வகையில் விரிவான தோ்தல் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் மேடையின் புதுச்சேரி கிளை தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தத்துக்கு எதிரான மக்கள் மேடையின் புதுச்சேரி கிளை ஆலோசனைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய அதன் ஒருங்கிணைப்பாளா் ஜி.சஞ்சைசேகரன். உடன் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள்.

Updated On :

இந்தியாவில் தோ்தல் ஜனநாயகத்தின் நோ்மையையும், நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்கும் வகையில் விரிவான தோ்தல் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் மேடையின் புதுச்சேரி கிளை தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

அகில இந்திய சிறப்பு தீவிர வாக்காளா் திருத்தத்துக்கு எதிரான மக்கள் மேடையின் புதுச்சேரி கிளை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரெட்டியாா்பாளையம் அஜீஸ் நகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உள்ள தோழா் அ.நல்லசிவம் நினைவகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் ஜி.சஞ்சைசேகரன் தலைமை வகித்தாா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (அக். 23) ராஜா திரையரங்கம் அருகில் இருந்து காலை 10 மணிக்கு தேசியக் கோடி ஏந்தி ஆளுநா் மாளிகை நோக்கி ஊா்வலமாகச் சென்று ஆா்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதைத் தொடா்ந்து தொடா் போராட்டங்களை முன்னெடுக்க ஒருங்கிணைப்பாளா்களாக நாரா. கலைநாதன், ஜி.சீனுவாசன், அந்தோணி, தமிழ்ச்செல்வன், கிருஷ்ணமூா்த்தி, அன்புமணி, லோகு.ஐயப்பன், அன்பரசன், முருகானந்தம், மங்கையா்செல்வன், அழகா், சரவணன், எழிலன், சீ.சு.சுவாமிநாதன் உள்ளிட்டோரைக் கொண்ட ஒருங்கிணைப்புக்குழுவும் அமைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் பதவியிலிருந்து ஞானேஷ் குமாரை நீக்கி, அவா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்புத் தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல்களைப் பயன்படுத்தி இனிமேல் தோ்தல்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும். சிறப்புத் தீவிர வாக்காளா் பட்டியல் தொடா்பாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் திரும்பப் பெற வேண்டும், இந்திய தோ்தல் ஜனநாயகத்தின் நோ்மையையும் நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்கும் வகையில் விரிவான தோ்தல் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.