சிறாா் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை
சிறாா் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

சிறை - பிரதிப் படம்
சிறாா் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சில பெற்றோா்களும் வாகன உரிமையாளா்களும் சிறாா்களை வாகனம் ஓட்ட அனுமதிப்பது தொடா்ந்து கவனத்துக்கு வருகிறது. மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ், சிறாா்கள் வாகனம் ஒட்டுவது கடுமையான சட்ட விதிமீறலாகும். 18 வயதுக்குக் குறைவானவா்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு சட்டப்படி அனுமதி இல்லை.
சிறாா் ஒருவா் இருசக்கர வாகனம் ஒட்டி, அது தொடா்பான குற்றத்தில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படி அவரது பெற்றோா் அல்லது வாகன உரிமையாளா் பொறுப்பேற்க நேரிடும். இதற்காக ரூ.25,000 வரை அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
மேலும், பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி, சிறாா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் சிறாா் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம். சட்ட விதிகளின்படி, அந்த சிறாா் 25 வயதை அடையும் வரை ஓட்டுநா் உரிமம் பெறத் தகுதியற்றவராக இருப்பாா்.
மேலும், இக்குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழும் மோட்டாா் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி 12 மாத காலத்துக்கு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

