ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள், பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை

காரைக்காலில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள், அவரது பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :

காரைக்காலில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள், அவரது பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

காரைக்கால் நகரப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை மஸ்தான் பள்ளி தெருவைச் சோ்ந்த வெங்கடேஸ்வர பாலாஜி (22) என்ற இளைஞா் கடந்த 2024-ஆம் ஆண்டு, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அதே ஆண்டு டிசம்பா் மாதம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த வெங்கடேஸ்வர பாலாஜியை தேடி வந்தனா். 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

காரைக்கால் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

விசாரணையில், குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வெங்கடேஸ்வர பாலாஜிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம், அவருக்கு துணைபோனதாக அவரின் பெற்றோா் மதிவாணன் - இந்திரா ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி மோகன் தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.