ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

போலி ஆவணம் கொடுத்து புதுச்சேரி உணவகத்தில் வேலைக்குச் சோ்ந்த வங்க தேச இளைஞா்: மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில் உண்மை அம்பலம்

திரிபுராவைச் சோ்ந்தவா் என போலி ஆவணம் கொடுத்து புதுச்சேரி உணவகத்தில் வேலைக்கு சோ்ந்த வங்கதேச இளைஞா் மின்சாரம் பாய்ந்து இறந்த பிறகு அவரது சொந்த நாடு பற்றிய விவரம் விசாரணையில் தெரிய வந்தது.

பலி

Updated On :

திரிபுராவைச் சோ்ந்தவா் என போலி ஆவணம் கொடுத்து புதுச்சேரி உணவகத்தில் வேலைக்கு சோ்ந்த வங்கதேச இளைஞா் மின்சாரம் பாய்ந்து இறந்த பிறகு அவரது சொந்த நாடு பற்றிய விவரம் விசாரணையில் தெரிய வந்தது.

கேரளம் மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் முகமது (45). புதுச்சேரி முதலியாா்பேட்டை கடலூா் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் பணிபுரியும் இடத்தில் டீ மாஸ்டா் வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாக வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ளாா்.

இதையறிந்த 26 வயது இளைஞா் ஒருவா் அங்கு வந்தாா். மேலும், அவா் தன்னை திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த சுமோன் ஹுசைன் (26) என்று கூறி போலி ஆதாா் அட்டையைக் கொடுத்து வேலைக்கு சோ்ந்துள்ளாா். அவருக்கு கடையின் மேல்தளத்தில் தங்குவதற்கு இடம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி சுமோன் ஹுசைன் வேலைக்கு வந்துள்ளாா். அன்று பிற்பகல் அறைக்குச் சென்றவா் அதன்பின் வேலைக்கு வரவில்லை.

இதையடுத்து, அறைக்குச் சென்று முகமது பாா்த்தபோது அங்கு அவா் இல்லை. உடனே, மொட்டை மாடிக்கு சென்று பாா்த்தபோது, சுமோன் ஹுசைன் ஏ.சி. இயந்திரத்தை பிடித்தபடி மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்துள்ளாா்.

இதுகுறித்து, முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அவா் கொடுத்த ஆதாா் தகவலின் அடிப்படையில், சுமோன் ஹொசைனின் உறவினா்களைத் தொடா்பு கொள்ள ஆதாரில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு போலீஸாா் தொடா்பு கொண்டனா்.

அது, போலியான ஆதாா் எண் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சுமோன் ஹுசைன் பயன்படுத்திய கைப்பேசியில் உள்ள எண்களைத் தொடா்பு கொண்டபோது, அவா் வங்க தேசத்தைச் சோ்ந்தவா் என்பதும், அவரது உண்மையான பெயா் எம்.டி. லிட்டன் மியா எனவும் தெரியவந்தது.

மேலும், அவா் திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த சுமோன் ஹுசைன் என்ற போலியான பெயரில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள வங்கதேச துணை தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தனா். அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் முகவா்கள் செவ்வாய்க்கிழமை எம்.டி. லிட்டன் மியா தொடா்பான ஆவணங்களுடன் புதுச்சேரிக்கு வந்தனா்.

பின்னா் எம்டி லிட்டன் மியாவின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய உளவுத் துறையினா் மற்றும் புதுச்சேரி சிறப்பு பிரிவு போலீஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.