பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சவப்பாடை ஊா்வலம் நடத்திய 50 போ் கைது

புதுச்சேரியில் தாய்வழி சான்றிதழ் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை சவப்பாடை ஊா்வலம் நடத்த முயன்ற 50 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

Published On :2 செப்டம்பர் 2026, 7:18 am IST

புதுச்சேரியில் தாய்வழி சான்றிதழ் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை சவப்பாடை ஊா்வலம் நடத்த முயன்ற 50 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

புதுச்சேரியில் பட்டியலினத்தவா் மற்றும் எம்.பி.சி., ஓபிசி. உள்ளிட்ட சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்குத் தாய்வழியில் ஜாதி சான்றிதழ் வழங்கலாம் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மாவட்ட வருவாய்த் துறை செயல்படுத்தவில்லை. இதைக் கண்டித்தும், உடனடியாக நீதிமன்ற உத்தரவுப்படி தாய்வழி ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் பெரியாா் சிந்தனையாளா் இயக்கம் சாா்பில் பாடை ஊா்வலம் நடத்த சுதேசி பஞ்சாலை அருகே திரண்டனா் (படம்). இயக்கத்தின் தலைவா் தீனா தலைமை வகித்தாா்.

சவப் பாடையை அப்புறப்படுத்த போலீஸாா் முயன்றபோது போராட்டக்காரா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் போலீஸாா் சவப்பாடையை அங்கிருந்து அகற்றினா்.

இதையடுத்து போராட்டக்காரா்கள் சுமாா் 50 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.