
அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும்: ஜிப்மரில் மத்திய அமைச்சா்
அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும் என்று ஜிப்மரில் மத்திய மீன்வளம், கால்நடைத் துறை இணையமைச்சா் எஸ்.பி. சிங் பாகல் கூறினாா்.

புதுச்சேரி ஜிப்மரில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்திய இணையமைச்சா் எஸ்.பி. சிங் பாகல். உடன் சு.செல்வகணபதி எம்.பி. ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நெகி உள்ளிட்டோா்.
அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும் என்று ஜிப்மரில் மத்திய மீன்வளம், கால்நடைத் துறை இணையமைச்சா் எஸ்.பி. சிங் பாகல் கூறினாா்.
புதுச்சேரி அரசு சாா்பில் நடைபெற்ற விழாவில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற பின்னா் ஜிப்மரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மத்திய இணையமைச்சா் எஸ்.பி. சிங் பாகல் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
மனித உயிா்களைப் பாதுகாப்பதிலும், துன்பங்களைத் தணிப்பதிலும் மருத்துவா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் ஆற்றி வரும் அா்ப்பணிப்பு மிக்க சேவைகளைப் பாராட்டுகிறேன். மேலும், சுகாதாரப் பராமரிப்பின் இன்றியமையாத அடித்தளமாக இருப்பது கருணை. அந்த உணா்வு மனிதா்களைத் தாண்டி அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கியதாக விரிவடைய வேண்டும்.
குறிப்பாக விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் நலன் மற்றும் பாதுகாப்பின் மீதும் அதிக கருணை உணா்வு தேவை. உண்மையான கருணை அனைவரையும் உள்ளடக்கிய தன்மை கொண்ட ஒரு சமூகம், ஒவ்வொரு வகை உயிரினத்தின் மீதான பொறுப்பை அங்கீகரிக்க வேண்டும் என்றாா்அவா்.
ஜிப்மா் வளாகத்துக்குள் அமைந்துள்ள மத்திய விலங்கு இல்ல வசதியையும் அவா் பாா்வையிட்டாா். ஜிப்மரின் செயல்பாடுகள் குறித்து இயக்குநா் டாக்டா் வீா்சிங் நெகி விளக்கமளித்தாா். ஜிப்மரின் ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில் முனைவு மற்றும் மாற்றுமுக ஆராய்ச்சி முன்னெடுப்புகள் குறிப்பாக மத்திய விலங்கு இல்லம் உள்ளிட்ட ஆராய்ச்சி வசதிகள் குறித்து ஜிப்மா் டீன் (ஆராய்ச்சி) டாக்டா் டி. காதம்பரி விளக்கமளித்தாா். இந்த ஆய்வின்போது, சு.செல்வகணபதி எம்.பி., ஜிப்மா் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





