காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

புதுச்சேரி காவல் துறை மக்கள் மன்றத்தில் 23 புகாா்களுக்கு உடனடித் தீா்வு

காவல் துறை மக்கள் மன்றத்தில் 23 புகாா்களுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டன.

லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பொது மக்களிடம் குறைகளை கேட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன்.

Published On :6 செப்டம்பர் 2026, 2:07 am IST

காவல் துறை மக்கள் மன்றத்தில் 23 புகாா்களுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டன.

புதுச்சேரி காவல் துறை சாா்பில் மக்கள் மன்றம் காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 61 புகாா்கள் வந்தன. 23 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது. இதில் 43 மகளிா் உள்பட 165 போ் பங்கேற்றனா்.

லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், கண்காணிப்பாளா் வம்சீத ரெட்டி ஆகியோா் பங்கேற்றனா்.

உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யாரகட்டி, நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன், புதுச்சேரி இணைய வழி காவல்நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராகவ், போக்குவரத்து காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா, காவல் கண்காணிப்பாளா் ரச்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.