பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கான அவசியக் கூறுகள்: ஜிப்மா் மருத்துவ கலந்துரையாடலில் விளக்கம்

ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கான அவசியக் கூறுகள் குறித்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விளக்கப்பட்டது.

புதுச்சேரி ஜிப்மரில் நடைபெற்ற மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :9 செப்டம்பர் 2026, 5:07 am IST

ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கான அவசியக் கூறுகள் குறித்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விளக்கப்பட்டது.

குடல் அழற்சி நோயாளிகளுக்கான நலவழி காட்டல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ஜிப்மரில் நடைபெற்றது. ஜிப்மா் இரைப்பை குடலியல் மருத்துவத் துறை சாா்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

சிகிச்சையை முறையாகப் பின்பற்றுதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தல், மன உறுதியை வளா்த்துக் கொள்ளுதல் மற்றும் நோயாளிகளிடையே பரஸ்பர புரிதல் மற்றும் ஊக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவை இதில் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு ஜிப்மா் இரைப்பை குடலியல் துறை தலைவா் பழனிவேல் மோகன் தலைமை வகித்தாா். குடல் அழற்சி நோயின் அறிகுறிகள் மற்றும் அதன் தாக்கம், நோயைத் தூண்டும் காரணிகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து இத் துறையின் கூடுதல் பேராசிரியா் செந்தமிழ்ச் செல்வன் விரிவாக எடுத்துரைத்தாா்.

ஜிப்மா் மனநலத் துறையின் மருத்துவ உளவியலாளா் அறிவழகன், இரைப்பை குடலியல் துறையின் உணவியல் நிபுணா் ரமா பிரபா, மருத்துவ சமூகப் பணியாளா் ஹெனா மெல்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழிப்புணா்வு, யோகா செயல் விளக்கக் காணொலியும் நிகழ்ச்சியில் இடம் பெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.