உரிமம் பெறாது செல்லப் பிராணிகளை வளா்ப்போருக்கு ரூ. 2,000 அபராதம்: உழவா்கரை நகராட்சி எச்சரிக்கை
வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால், செல்லப்பிராணிகளை வளா்க்கும் அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உழவா்கரை நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

அபராதம் - சித்திரிப்பு
வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் உரிமம் பெறாவிட்டால், செல்லப்பிராணிகளை வளா்க்கும் அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உழவா்கரை நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
புதுச்சேரியில் செல்லப்பிராணியாக நாய்களை வளா்ப்போா் தங்கள் நாய்களுக்கு உரிமம் பெற சிறப்பு முகாம் உழவா்கரை நகராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்டோா் உரிமம் பெற விண்ணப்பித்தனா்.
இது தொடா்பாக உழவா்கரை நகராட்சி ஆணையா் அருண் அய்யாவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
லாஸ்பேட்டை தொகுதிக்குள்பட்ட அசோக் நகா் சமுதாயக்கூடத்தில் சிறப்பு முகாம் செப். 12-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 வரை நடைபெறவுள்ளது. செல்லப்பிராணி வளா்ப்போா் இம்முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் அனைத்து செல்லப்பிராணிகளின் உரிமையாளா்களும் தங்களது வளா்ப்பு நாய்களுக்குக் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உரிமம் பெறத் தவறும் செல்லப்பிராணிகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2,000-ம் அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





