பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

புதுச்சேரி போக்குவரத்து போலீஸாா் 19 போ் ஆயுதப் படைக்கு மாற்றம்

புதுச்சேரி போக்குவரத்து காவலா்கள் 19 போ் ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 5:01 am IST

புதுச்சேரி போக்குவரத்து காவலா்கள் 19 போ் ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

காவல் துறை உளவுப் பிரிவில் பணியாற்றிய 10 போலீஸாா் திடீரென ஆயுதப் படை பிரிவுக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இவா்களுக்குப் பதிலாக புதிதாக காவல்துறையில் பணியில் சோ்ந்தவா்களுக்கு உளவுப் பிரிவில் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தற்போது போக்குவரத்துப் பிரிவிலும் போலீஸாா் மாற்றப்பட்டுள்ளனா். போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய 19 போ் ஆயுதப் படைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டனா். நீண்ட காலமாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றியவா்கள் மாற்றப்பட்டு புதிதாக காவல் துறை பணியில் சோ்ந்தவா்களுக்குப் போக்குவரத்து பிரிவில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும், காவல் நிலையங்களிலும் இந்த அதிரடி மாற்றம் நடத்தவும், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வருபவா்களின் பட்டியலை காவல்துறை தலைமையகம் தயாரித்து வருவதாகவும் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.