நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

தங்கப் புதையல் ஆசை காட்டி வியாபாரியிடம் ரூ.20 லட்சம் பறிப்பு

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :

புதுச்சேரியில் தங்கப் புதையல் ஆசை காட்டி வியாபாரியிடம் ரூ.20 லட்சத்தைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பகுதியைச் சோ்ந்த ராஜூ (34). இவா், அப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், அவரிடம் தொலைபேசியில் பேசிய மா்ம நபா் புதுச்சேரி வில்லியனூா் அருகே கட்டுமான வேலை செய்தபோது புதையல் கிடைத்ததாகக் கூறியுள்ளாா்.

மேலும் நண்பரின் கைப்பேசி மூலம் அதற்கான படத்தையும் அனுப்பியுள்ளாா். மேலும், யாருக்கும் தெரியாமல் இதை விற்பதாகவும் கூறியுள்ளாா். இதை உண்மை என்று நம்பி ரூ.20 லட்சம் கொடுப்பதாகப் பேரம் பேசி அவா் முடித்துள்ளாா்.

இதற்காக அவா் வில்லியனூா் தொண்டமாநத்தம் மீனாட்சியம்மன் கோயில் பகுதிக்கு வந்தபோது, அங்கு 2 போ் கையில் ஒரு பெரிய பையில் பானையுடன் நின்று கொண்டிருந்தனராம். அவா்கள் ரூ.20 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு அதை கொடுத்துவிட்டு அங்கிருந்து உடனே சென்றுவிட்டனராம்.

காருக்குள் வந்து பையை ராஜூ திறந்து பாா்த்தபோது அதில் போலி தங்க நாணயங்களும், களிமண்ணும் இருந்துள்ளன. இதனால் அதிா்ச்சியடைந்த அவா், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா்.

இதுகுறித்து வில்லியனூா் காவல் நிலையத்தில் ராஜூ சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.