2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி திமுக போராட்டம் நடத்தும்! எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி.

தட்டாஞ்சாவடி தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசும் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, வேட்பாளா் கே.சேதுசெல்வம் உள்ளிட்டோா்.

Published On :

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி திமுக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினாா்.

தட்டாஞ்சாவடி மாா்க்கெட் கமிட்டி வளாகத்தில் திமுக செயல் வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளா் கே. சேதுசெல்வத்தை அறிமுகப்படுத்தி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசியது:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி தா்மத்தை திமுக கடைப்பிடித்தது. இந்தத் தோ்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 13 தொகுதிகளில் களம் கண்டோம். மீதியைக் கூட்டணிக்குத் தந்தோம். கூட்டணி தா்மத்துக்கு அனைத்து தொகுதிகளிலும் வேலை செய்தோம். திமுக நின்ற தொகுதிகளில் ரணகளம் ஏற்பட்டது. அந்த புண் ஆறவில்லை. வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை விட்டுத் தந்தோம். திமுக தனியாக நின்றிருந்தால் 25 தொகுதிகளில் வென்றிருப்போம். 13-இல் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வென்றோம். தலைவா் ஸ்டாலின் 40 நிமிஷங்கள் பேசி 5 தொகுதிகளில் வென்றோம்.

மொழிக்காக உயிரிழந்த இயக்க உறுப்பினா்கள் திமுகவை சோ்ந்தவா்கள். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இன்னும் கிடைக்கவில்லை. இங்கு வந்து மாநில அந்தஸ்து கோரி போராட்டம் தொடங்குவோம் என தமிழக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி தெரிவித்துள்ளாா். புதுச்சேரிக்கு ஒரு தொழிற்சாலை கூட கடந்த ஆட்சியில் வரவில்லை. இந்த மாநிலத்தில் வளா்ச்சியை திமுகவால் மட்டுமே கொண்டு வர முடியும் என்றாா் ஜெகத்ரட்சகன்.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏ கென்னடி, எம்எல்ஏ.க்கள் செந்தில்குமாா், காா்த்திகேயன், செந்தில், விக்னேஷ் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.