ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

புதுச்சேரியில் உயா்நீதிமன்றக் கிளை: மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்

சென்னை உயா்நீதிமன்றத்தின் கிளையை புதுச்சேரியில் அமைக்க வலியுறுத்தி தில்லியில் மத்திய அமைச்சரிடம் புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை நேரில் கோரிக்கை விடுத்தாா்.

பட விளக்கம்...புதுச்சேரியில் உயா்நீதிமன்ற கிளையை அமைக்கக் கோரி புதுதில்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்த புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.

Published On :

சென்னை உயா்நீதிமன்றத்தின் கிளையை புதுச்சேரியில் அமைக்க வலியுறுத்தி தில்லியில் மத்திய அமைச்சரிடம் புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை நேரில் கோரிக்கை விடுத்தாா்.

புதுதில்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலை புதுச்சேரி உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தாா்.

அப்போது, புதுச்சேரியில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தனி அமா்வை விரைவில் அமைக்க வலியுறுத்தி மனு அளித்தாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களுக்குக் குறைந்த செலவில், விரைவான மற்றும் எளிதான முறையில் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாக இது அமையும் என்று அப்போது வலியுறுத்தினாா் என்று புதுச்சேரியில் உள்ள அமைச்சரின் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.