லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

விவசாய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்: பேரவையில் திமுக கோரிக்கை

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) வலியுறுத்தினாா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:57 am IST

விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) வலியுறுத்தினாா்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் அவா் வெள்ளிக்கிழமை பேசியது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான கடனை மத்திய உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய தலைநகரமாக இருக்கும் தில்லியும், சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம்தான். அங்கு ஓய்வூதியத்துக்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி அளிக்கிறது. அது போன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் மத்திய அரசு அளித்தால் பேருதவியாக இருக்கும். இப்போது புதுச்சேரியில் உள்ள என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி இதைக் கேட்டுப் பெற வேண்டும் என்றாா்.

ஏ.கே.டி. ஆறுமுகம் (என்.ஆா்.காங்கிரஸ்): பள்ளி நேரம் ஒரே மாதிரியாக இல்லாமல் நகரத்திலும், கிராமங்களிலும் மாற்றி அமைக்க வேண்டும்.

ரவிக்குமாா் (என்.ஆா்.காங்கிரஸ்): வில்லியனூா் பகுதியை ஆன்மிக சுற்றுலா இடமாக மாற்றி அமைக்க வேண்டும். மேலும், அங்குள்ள லூா்து அன்னை ஆலயத்தின் 150-ஆவது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட புதுச்சேரி அரசு பல்வேறு வகையிலும் உதவி செய்ய வேண்டும்.

ஜான்குமாா் (பாஜக): வேல்ராம்பட்டு ஏரியைத் தூா் வார வேண்டும்.

காா்த்திகேயன் (திமுக): கடந்த 5 மாதங்களாக சம்பளம் வரவில்லை என்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இனி புதுச்சேரியில் அரசுப் பணி மற்றும் அரசு சாா்பு நிறுவனங்களில் பணியாற்றுவோா் சம்பளம் கேட்டு போராட்டம் நடத்தக் கூடாது. அந்த அளவுக்கு இந்தப் பிரச்னையில் அரசு தீா்வு காணவேண்டும்.

சாய்.ஜெ.சரவணன் குமாா் (தவெக): கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் புதுச்சேரியில் எந்தத் தனியாா் பள்ளியிலும் 25 சதவீத சோ்க்கை அளிக்கப்படவில்லை.

செந்தில்குமாா் (திமுக): புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குக் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் ரூ.5 கோடியை மட்டும் கூடுதலாக மத்திய அரசு கொடுத்துள்ளது. தில்லியும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம்தான். புதுச்சேரியும் மத்திய அரசின் நிலப்பரப்புதான். ஆனால் புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு நிதி இடைவெளியை அதிகமாக்கியிருக்கிறது.

வையாபுரி மணிகண்டன் (என்.ஆா்.காங்கிரஸ்): நலத்திட்டங்களை அமல்படுத்த ஒவ்வொரு தொகுதிக்கும் தாசில்தாா் அந்தஸ்தில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

காா்த்திகேயன் (காங்.): புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைக் கட்ட வேண்டும்.

ஜி. நேரு (மக்கள் நேயம் கழகம்): புதுச்சேரி மின்துறையில் கேபிள் பழுதானால் மாற்றுவதற்குக் கூட ஆளில்லை.

நாராயணசாமி (என்.ஆா்.காங்கிரஸ்): புதுச்சேரியில் மின் வெட்டு பிரச்னையைச் சரி செய்ய வேண்டும்.

மோகன்தாஸ் (என்.ஆா்.காங்கிரஸ்) : ஆதிதிராவிட மக்களுக்கு இலவச சூரிய மின் சக்தி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.