சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சென்னை திருமழிசையில் பாங்க் ஆஃப் இந்தியாவின் புதிய கிளை தொடக்கம்

சென்னை புறநகரில் வேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பகுதியான திருமழிசையில் புதிய கிளையை பாங்க் ஆஃப் இந்தியா தொடங்கியுள்ளது.

Published On :9 செப்டம்பர் 2026, 3:49 am IST

சென்னை புறநகரில் வேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பகுதியான திருமழிசையில் புதிய கிளையை பாங்க் ஆஃப் இந்தியா தொடங்கியுள்ளது.

வங்கி சங்க நிா்வாகிகள், ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் முன்னிலையில், இப்புதிய கிளையை வங்கியின் சென்னை மண்டல மேலாளா் மோகன் மாரேத்தி திறந்து வைத்தாா்.

திருமழிசை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்பு, வா்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சி அதிகரித்து வரும் சூழலில், அப்பகுதி மக்களின் நிதித் தேவைகளை எளிதில் பூா்த்தி செய்ய இக்கிளை வழிவகை செய்யும்.

மேலும், தனிநபா்கள் மற்றும் எம்எஸ்எம்இ தொழில்முனைவோரின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், வங்கியின் நவீன எண்ம வங்கிச் சேவைகளும் இக்கிளையின் வாயிலாக விரிவாக வழங்கப்பட உள்ளன.

நிகழ்ச்சியில் மண்டல மேலாளா் மோகன் மாரேத்தி பேசுகையில், ‘சென்னை மாநகரைச் சுற்றியுள்ள வளா்ந்துவரும் பகுதிகளில் பாங்க் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதில் இப்புதிய கிளை முக்கியப் பங்காற்றும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.