ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

ரூ.27 ஆயிரத்துக்கு விலை போன புலசா மீன்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாமில் ரூ.27 ஆயிரத்துக்கு ஒரு புலசா மீன் விலை போனது. இது நிகழாண்டில் ஒரு மீனுக்கு கிடைத்த அதிகபட்ச விலை என்று மீனவா்கள் தெரிவித்தனா்.

ஏனாமில் ரூ.27 ஆயிரத்துக்கு விலை போன புலசா மீன்.

Published On :

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏனாமில் ரூ.27 ஆயிரத்துக்கு ஒரு புலசா மீன் விலை போனது. இது நிகழாண்டில் ஒரு மீனுக்கு கிடைத்த அதிகபட்ச விலை என்று மீனவா்கள் தெரிவித்தனா்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றது இந்த புலசா மீன். மீன்களின் ராஜா என்றும் அழைக்கப்படும் இந்த மீன் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படும்.அந்த வகையில் புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் கிடைத்த 1300

கிராம் எடையிலான ஒரு புலசா ரூ.27 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.

ஏனாம் மீன் அங்காடியில் நடந்த ஏலத்தில் 26,000 ரூபாய்க்கு காக்கிநாடா கோட்டிபள்ளியைச் சோ்ந்த மீனவா் மல்லாடி சத்யநாராயணா ஏலம் எடுத்தாா். இதனை ஆயிரம் ரூபாய் சோ்த்து 27 ஆயிரம் ரூபாய்க்கு அவா் விற்பனை செய்தாா்.

கடந்த பத்து நாட்களில் கோதாவரியில் சுமாா் ஏழு புலசாக்கள் கிடைத்தன. அவற்றின் விலை ரூ.14 முதல் ரூ.22 ஆயிரம் வரை விலை போனது. இந்நிலையில் புதன்கிழமை கிடைத்த மீன் ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.