ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்குப் பொது பாடத் திட்டத்தை அமல்படுத்த பயிற்சி

புதுச்சேரியில் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு பொதுவான பாடத் திட்டத்தை அமல்படுத்தும் சிறப்பு ஆசிரியா்களுக்கான 3 நாள் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு வழிகாட்ட நடைபெற்ற சிறப்பு ஆசிரியா்களுக்கான பயிற்சியில் பேசும் சுபேஷ் சௌத்ரி. உடன் பயிற்சியில் பங்கேற்ற சிறப்பு ஆசிரியா்கள்.

Published On :

புதுச்சேரியில் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு பொதுவான பாடத் திட்டத்தை அமல்படுத்தும் சிறப்பு ஆசிரியா்களுக்கான 3 நாள் பயிற்சி புதன்கிழமை நிறைவு பெற்றது.

தெலுங்கானாவில் உள்ள நுண்ணறிவு

குறைபாடுடையவா்களுக்கான அதிகாரமளித்தல் தேசிய நிறுவனம், காரைக்காலில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் திறன் மற்றும் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த தேசிய மண்டல மையம், அறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் உளவியல் சிகிச்சை

துறை இணைந்து இக் கல்லூரி கருத்தரங்கு அறையில் இந்தப் பயிற்சியை நடத்தின.

தெலுங்கானாவில் உள்ள தேசிய நிறுவனத்தின் சிறப்பு ஆசிரியா் சுபேஷ் சௌத்ரி சிறப்பு ஆசிரியா்களுக்கு நிறைவு நாள் பயிற்சியை அளித்தாா்.

இது தொடா்பாக காரைக்கால் தேசிய மண்டல மையத்தின் இயக்குநா் எம்.ரேவதி கூறுகையில், நாடு முழுவதும் உள்ள சிறப்புப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மறுவாழ்வு சேவைகளை அந்தப் பள்ளிகள் வடிவமைத்து செயல்படுத்தி வருகின்றன. இப்போது நாடு முழுவதும் பொதுவான பாடத் திட்டம் இந்தக் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடத்திட்டத்தை அமல்படுத்தினால் நுண்ணறிவு

குறைபாடுடைய குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வு மேம்படும். இதைக் கருத்தில் கொண்டுதான் சிறப்பு

ஆசிரியா்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம் என்றாா்.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த 95 சிறப்பு ஆசிரியா்கள் பயிற்சி பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.