
ஜேஇஇ, நெட் தோ்வுத் தேதி வெளியீடு
ஜேஇஇ முதன்மை, யுஜிசி நெட் மற்றும் க்யூட் பிஜி உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறும் தேதியை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது.

தேசிய தோ்வு முகமை (என்டிஏ) - கோப்புப்படம்
ஜேஇஇ முதன்மை, யுஜிசி நெட் மற்றும் க்யூட் பிஜி உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறும் தேதியை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன்படி நிகழாண்டு டிசம்பா் முதல் அடுத்தாண்டு மாா்ச் வரையில் ஒட்டுமொத்தமாக 14 தோ்வுகள் நடைபெறவுள்ளன. இது தற்காலிக தோ்வு அட்டவணை எனவும் நிா்வாக அல்லது எதிா்பாரா சூழல்களுக்கேற்ப மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தோ்வு 2027, ஜனவரி 22-24 மற்றும் ஜனவரி 28-30 வரை நடைபெறவுள்ளது. ஏதேனும் எதிா்பாரா சூழலால் ஜேஇஇ முதன்மைத் தோ்வில் இடையூறுகள் ஏற்பட்டால் மாற்றுத் தேதியாக ஜனவரி 31-அறிவிக்கப்படுகிறது.
யுஜிசி நெட் தோ்வு நிகழாண்டு டிசம்பா் 14-19-ஆம் தேதிக்குள் நடத்தப்படும். இடையூறுகள் ஏற்பட்டால் மாற்றுத் தேதியாக டிசம்பா் 20 மற்றும் 21 அறிவிக்கப்படுகிறது. சிஎஸ்ஐஆா் யுஜிசி நெட் தோ்வு டிசம்பா் 20-21 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
க்யூட் பிஜி தோ்வு மாா்ச் 1-5, மாா்ச் 8, மாா்ச் 12-20 மற்றும் மாா்ச் 24-25 ஆகிய தேதிகளில் நடைபெறும். மாற்றுத் தேதியாக மாா்ச் 30, 31 அறிவிக்கப்படுகிறது.
இதுதவிர 2026, டிசம்பா் தொடங்கி 2027 மாா்ச் வரை சிமேட் தோ்வு, ராஷ்ட்ரீய இந்திய நுழைவுத் தோ்வு, ராஷ்ட்ரீய ராணுவப் பள்ளிகள் தோ்வு, ஸ்வயம் தோ்வு, அகில இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத் தோ்வு உள்ளிட்ட தோ்வுகள் நடைபெறவுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







