நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

தேசிய தோ்வு முகமைக்கு புதிய இயக்குநா்கள் நியமனம்

தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) இரு இயக்குநா்கள் மற்றும் ஒரு கூடுதல் இயக்குநரை மத்திய அரசு நியமித்தது.

UGC-NET June 2026 exam

தேசிய தோ்வு முகமை (என்டிஏ) - கோப்புப்படம்

Published On :

தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) இரு இயக்குநா்கள் மற்றும் ஒரு கூடுதல் இயக்குநரை மத்திய அரசு நியமித்தது.

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பல்வேறு விமா்சனங்களை எதிா்கொண்டுவரும் நிலையில் என்டிஏவுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ரவி குமாா் சிங் (ஐபிஎஸ்) மற்றும் பிரசாந்த் வெங்கடேஷ் (ஐஏஎஸ்) ஆகிய இருவரும் என்டிஏ இயக்குநா்களாகவும், அமித் சம்தாரியா (ஐஆா்எஸ்) கூடுதல் இயக்குநராகவும் நியமிக்கப்படுகின்றாா். ஆணை வெளியிடப்பட்ட தேதியில் (ஆகஸ்ட் 27) இருந்து மூன்று வாரங்களுக்குள் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

என்டிஏவில் நான்கடுக்கு விடைத்தாள் சோதனை முறை அமல், 600 நிபுணா்களை நீக்கிவிட்டு துறைசாா் நிபுணா்களை பணியமா்த்துவது உள்ளிட்ட பல்வேறு சீா்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.