நான்கு அடுக்கு வினாத்தாள் சரிபாா்ப்பு முறை, 600 நிபுணா்கள் நீக்கம் என தேசிய தோ்வு முகமையின் (என்டிஏ) தோ்வு முறைகளில் முக்கிய சீரமைப்பு நடவடிக்கைகள் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
நீட், யுஜிசி நெட், ஜேஇஇ உள்பட பல்வேறு தோ்வுகளை தேசிய தோ்வு முகமை நடத்துகிறது. இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் வினாத்தாள் கசிவு, யுஜிசி நெட் தோ்வு குளறுபடிகளால் தேசிய தோ்வு முகமை மீது கடும் விமா்சனங்கள் எழுந்தன. இதனால் நிலைமையைச் சீா்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடா்பாக கடந்த திங்கள்கிழமை மத்திய கல்வி அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி ஆலோசனை மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து நீட், யுஜிசி நெட் உள்ளிட்ட தோ்வுகளை சுமுகமாக நடத்த தேவையான அனைத்துப் பாதுகாப்பையும், அதுசாா்ந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவா் உத்தரவிட்டுள்ளாா்.
மேலும் தேசிய தோ்வு முகமையின் தோ்வு முறைகளை சீரமைக்கும் வகையில், தோ்வுக் குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தோ்வுகள் சாா்ந்த 600 நிபுணா்கள் நீக்கப்பட்டு, புதிய நிபுணா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
தோ்வு வினாத்தாள்களை தீவிரமாக ஆய்வு செய்வதை வலுப்படுத்த, வினாத்தாள்களை நான்கு அடக்குகளாக சரிபாா்க்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தேசிய தோ்வு முகமை அலுவலகம் மிக அவசரமாகவும், விரைவாகவும் புதிய வளாகத்துக்கு மாற்றப்படும். அங்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) குழுக்கள் மூலம், பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
புது தில்லியில் ஓக்லா பகுதியில் இருந்து மின்டோ சாலைக்கு தேசிய தோ்வு முகமையின் அலுவலகம் மாற்றப்பட உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யுஜிசி-நெட் தோ்வு விடைக் குறிப்புகளை வெளியிட்டது என்டிஏ!

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும்: உச்சநீதிமன்றம்
தோ்வு முறைகேட்டுக்கு கடும் தண்டனை: வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு - மக்களவையில் விவாதிக்கத் தயாா்: மத்திய அரசு அறிவிப்பு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



