புது தில்லி: யுஜிசி-நெட் ஜூன் 2026 தேர்வின் 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தேர்வகள் விடைக்குறிப்புகள் மீதான ஆட்சேபனைகளை இணையதளம் வழியாக ஆன்லைனில் ஆக.16 முதல் 18-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை தெரிவிக்கலாம். ஆட்சேபனை தெரிவிக்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் உரிய ஆவணச் சான்றுகளைத் தேர்வர்கள் இணைக்க வேண்டும், ஒவ்வொரு கேள்விக்கும் செயலாக்கக் கட்டணமா ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆக.18 இரவு 11.59 மணிக்குள் செலுத்த வேண்டும்.
ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு வகையான பிழைகள் இருப்பதாகப் பெறப்பட்ட புகாா்களை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மேற்கண்ட மூன்று பாடங்கள் குறித்த தனி பொது அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் விடைக்குறிப்பு மற்றும் ஆட்சேபனை தொடா்பான தகவல்களுக்கு அதிகாரப்பூா்வ இணையதளம் மற்றும் சரிபாா்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே நம்புமாறு என்டிஏ அறிவுறுத்தியுள்ளது.
Summary
NTA has released the provisional answer keys for 84 subjects of the UGC-NET June 2026 examination
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யுஜிசி - நெட் தேர்வு: விடைக்குறிப்பு இன்று வெளியாகிறது!

யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!

பொறியியல் 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 79,403 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு! இன்று உறுதிப்படுத்துதல் அவசியம்

யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு: தர்மேந்திர பிரதான் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்!
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK




