யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கும், அங்கு முனைவர் பட்டங்களை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் மற்றும் மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய தேர்வு முகமை சார்பில் ‘நெட்’ தேர்வு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் இந்தத் தேர்வானது ஆண்டுக்கு இரண்டு முறை பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் தேர்வு ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் 30 வரை ஆறு நாள்கள் நடத்தப்பட்டது. மேலும், ஜூலை 6 ஆம் தேதி மறுதேர்வும் நடைபெற்று முடிந்தது.
இந்தத் தேர்வின் விடைக்குறிப்புக்காக தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில், அவை இன்று வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யுஜிசி நெட் (UGC NET) மட்டுமல்லாது, அறிவியல் துறைகளுக்கான சிஎஸ்ஐஆர் நெட் (CSIR-NET), விவசாயம் மற்றும் விலங்கு அறிவியல் பிரிவுகளுக்கான ஐசிஏஆர் ஏஐஇஇ (பிஜி) மற்றும் (பிஎச்டி) ICAR AIEEA (PG) and AICE (PhD) ஆகிய தேர்வுகளுக்கான விடைக் குறிப்புகளும் வெளியிடப்பட உள்ளன.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தற்காலிக விடைக்குறிப்பைப் பார்க்கவும், அதில் ஏதேனும் திருத்தம் இருப்பின் தேர்வர்கள் முறையிடவும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The National Testing Agency has announced that the answer key for the UGC-NET exam will be released on Sunday (August 16).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!

சாட் நுழைவுத் தேர்வு! தகுதி, பாடப்பிரிவு, தேர்வு முறை - முழு விவரம்

யுஜிசி நெட் வினாத்தாள் கசிவு: தர்மேந்திர பிரதான் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்!
கியூட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்




