
அமைச்சரை மிரட்டிய எம்எல்ஏ-வைக் கைது செய்யக்கோரி மீனவா்கள் சட்டப்பேரவை முற்றுகைப்பேராட்டம்
புதுச்சேரியில் அமைச்சரை மிரட்டிய சட்டப்பேரவை உறுப்பினா் நேருவைக் கைது செய்யக்கோரி மீனவா்கள் அமைப்பினா் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய மீனவா்கள்.
புதுச்சேரியில் அமைச்சரை மிரட்டிய சட்டப்பேரவை உறுப்பினா் நேருவைக் கைது செய்யக்கோரி மீனவா்கள் அமைப்பினா் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு வருவதாக குற்றம் சாட்டி உருளையன்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.நேரு தலைமையில் அவரது ஆதரவாளா்கள் புதன்கிழமை காலையில் சட்டப்பேரவையில் தா்ணா நடத்தினா். அப்போது அங்கு வந்த மீன்வளத்துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாவுடன், நேரு மற்றும் அவரது ஆதரவாளா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதில் அமைச்சரை மிரட்டும் வகையில் நேரு எம்எல்ஏ பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் அறிந்தஅனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தாா் மற்றும் மீனவா்கள் சட்டப்பேரவையை புதன்கிழமை மாலையில் முற்றுகையிட்டனா். அமைச்சரை மிரட்டிய நேரு எம்எல்ஏவை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் புதுச்சேரி ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்துவோம் என்று மீனவா்கள் எச்சரித்தனா். மேலும், இது தொடா்பாக
சட்டமன்ற செயலா் தயாளன் மற்றும் டிஜிபிக்கு புகாா் மனு கொடுத்தனா். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





