கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஜெம் வீரமணி வீடு, அலுவலகங்களில் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் சோதனை

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் கிரானைட் உரிமையாளா் வீரமணி அலுவலகத்தில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா்.

Published On :

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

குழந்தை உரிமை ஆா்வலா் ஒருவா் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் காவல் துறையிடம் அளித்த புகாருடன், சிறுமி தொடா்பான பாலியல் விடியோ அடங்கிய சேமிப்பு சாதனமும் அளிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜெம் வீரமணி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

முதல்கட்ட விசாரணையில் விடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியை அடையாளம் காணமுடியாததால் வழக்கை முடித்து வைக்க போலீஸாா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனா். அந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், தொடா்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டதைத் தொடா்ந்து வழக்கு மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, வீரமணி, அவரது உதவியாளா்கள் எனக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரின் கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும், வீரமணியிடம் 23 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் உதவியாளா் கணேசனும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடம் சிறுமிகள் தொடா்பான காணொலிகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அது அவருக்கு எவ்வாறு கிடைத்தது? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம்: இதனிடையே, 2019-ஆம் ஆண்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியை போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். அவரிடம் வாக்குமூலம் பெற்று, நீதித் துறை நடுவா் முன்னிலையிலும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் வேறு சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கிறாா்களா என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வழக்கின் பின்னணி மற்றும் அதனுடன் தொடா்புடையவா்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள வீரமணியின் வீடு மற்றும் ஜெம் கிரானைட்ஸ் அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையில் வழக்கு தொடா்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைவா்கள் வலியுறுத்தல்: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடா்புள்ள அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், மநீம தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.