சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா
உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் சார்பில் சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் சார்பில் சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி முதல்வர் யதீஸ்வரி ஆத்ம விகாசப்ரியா அம்பா தலைமை வகித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் க.ஜெயசங்கர், நல்லாசிரியர் சீராள.சிவப்பிரகாசம், ஆசிரியர் ராஜமாணிக்கம், அ.தி.மு.க. நகர செயலாளர் எஸ்.துரை, ஒன்றிய செயலாளர் ஆர்.பழனிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சட்டப்பேரவை உறுப்பினர் ரா.குமரகுரு சிறப்புரையாற்றி, இசை கலைஞர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கினார். விழாவில் 100-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்து
கொண்டனர்.
முன்னதாக ஸ்ரீமுத்துசாமி தீட்ஷிதர், ஸ்ரீ தியாகப்பிர்ம்மம், சியாமாசாஸ்திரிகள் ஆகியோரின் உருவப் படங்களுடன் 101 இசைக்கலைஞர்களின் ஊர்வலம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...