11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ராமதாஸ், அன்புமணி வீடுகளுக்கு அனுப்பப்பட்ட தடையுத்தரவு நகல்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் நுழையத் தடை விதிக்கப்ட்ட உத்தரவு நகல்கள் பா.ம.க. நிறுவனர் ரமாதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மற்றும் பல்வேறு கட்சி மற்றும் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On :13 மே 2013, 12:35 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் நுழையத் தடை விதிக்கப்ட்ட உத்தரவு நகல்கள் பா.ம.க. நிறுவனர் ரமாதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மற்றும் பல்வேறு கட்சி மற்றும் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

 இவர்கள் மட்டுமின்றி விழுப்புரம் டிஐஜி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி, அனைத்து டி.எஸ்.பிக்கள், சப்-கலெக்டர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோருக்கும் பார்வைக்காக நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன. முக்கிய செயலர்கள் மற்றும் மாநில போலீஸ் தலைமைக்கும் இதன் நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 இந்த உத்தரவில், கடந்த 25-ம் தேதி மரக்காணம் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பஸ்கள் எரிக்கப்பட்டு, சில பஸ்கள் உடைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிக்கைப்படி,  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மற்றும் அக்கட்சி உறுப்பினர்கள், வன்னியர் சங்க உறுப்பினர்கள், வேறு எந்த கட்சியின் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மரக்காணம் பகுதியிலோ, அதனுடன் தொடர்புடைய பகுதியிலோ, 30-4-2013 முதல் பா.ம.க.வின் போராட்டம் நடைபெற்ற பகுதியிலோ நுழையத் தடை விதிக்கப்படுகிறது.

மரக்காணம் சம்பவத்தையொட்டி ஜாதி ரீதியிலான பிரச்னையை உருவாக்கும் வகையில் எந்த அரசியல் கட்சியும், அமைப்பும் போராட்டங்கள், கூட்டங்களை நடத்தக் கூடாது. இதற்கு சி.ஆர்.பி.சி சட்டப் பிரிவு 144(1)-ன் படி தடைவிதிக்கப்படுகிறது எனத் தடையுத்தரவு நகலில் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.