எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பா.ம.க. தொண்டர் கொலை வழக்கு:சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடக்கம்

மரக்காணம் அருகே நடந்த கலவரத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மரக்காணம் பகுதியில் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.

Updated On :13 மே 2013, 12:34 am IST

மரக்காணம் அருகே நடந்த கலவரத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மரக்காணம் பகுதியில் சனிக்கிழமை விசாரணை நடத்தினர்.

 மாமல்லபுரத்தில் கடந்த 25-ஆம் தேதி வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பா.ம.க. தொண்டர்கள் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வாகனங்களில்

சென்றனர்.

 மரக்காணம் அருகே செல்லும் போது இவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இதில் பஸ்கள் எரிக்கப்பட்டன. வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் அரியலூரைச் சேர்ந்த பா.ம.க. தொண்டர் செல்வராஜ் கழிக்குப்பம் பகுதியில் இறந்தார்.

 அவர் விபத்தில் உயிரிழந்ததாக மரக்காணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனையின் போது செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து செல்வராஜ் இறந்த வழக்கை கொலை வழக்காக மரக்காணம் போலீஸார் மாற்றினர்.

 இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனப் பா.ம.க.வினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மரக்காணம், செல்வராஜ் இறந்து கிடந்த கழிக்குப்பம் ஆகிய பகுதிகளில் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.