ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!

ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு போதிய வகுப்பறைகள் கட்டப்படுமா?

திருக்கோவிலூரில் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் அவதியடைந்து  வருகின்றனர்.

Updated On :

திருக்கோவிலூரில் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் அவதியடைந்து  வருகின்றனர்.

திருக்கோவிலூரில் 1911-ம் ஆண்டில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டு, 2009-ம் ஆண்டில் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இங்கு 1911ஆம் ஆண்டு 3 வகுப்பறைகளும், 1985ஆம் ஆண்டு 2 வகுப்பறைகளும், 2009ஆம் ஆண்டு 6 வகுப்பறைகளும், 2014ஆம் ஆண்டு 4 வகுப்பறைகளும் கட்டப்பட்டன.

இதில் 1911ஆம் ஆண்டு கட்டப்பட்ட 3 வகுப்பறைகள் மிகவும் பழுதடைந்த கடந்த ஜூன் மாதம் இடிக்கப்பட்டன.

1985ஆம் ஆண்டு கட்டப்பட்ட 2 வகுப்பறைகளும் பழுதடைந்து அரசின் விலையில்லாப் பொருள்கள் வைக்கும் அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2009ஆம் ஆண்டு கட்டப்பட்ட 6 வகுப்பறைகளில் கீழ் தளத்தில் உள்ள 3 வகுப்பறைகளில் ஒன்றில் மட்டுமே 5ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

மற்றவைகளில் மாற்றுத் திறனாளிகள் மையமும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையமும் செயல்பட்டு வருகின்றன. இக்கட்டடத்தின் மேல்தளத்தில் உள்ள 3 வகுப்பறைகளில் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  2014ஆம் ஆண்டு கட்டப்பட்ட 4 வகுப்பறைகளில் 1,2,3,4 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் 6,7,8 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முற்றிலுமாக வகுப்பறைகள் கிடையாது.

இதனால் மரத்தடி, பிற வகுப்பறை என மாறிமாறி கல்வி பயின்று வருகின்றனர். இதனால் இப்பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இது குறித்து பள்ளி கல்விக்குழுத் தலைவர் தேவிமுருகனிடம் கேட்டபோது, மாணவர்கள் நலன் கருதி புதிதாக 3 வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட வேண்டும்.

இல்லையெனில், மாணவர்களுக்கான வகுப்பறையில் செயல்பட்டு வரும் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

சம்பந்தப்பட்ட பேரூராட்சி உறுப்பினர் நிர்மலா பாலாஜியிடம் கேட்டபோது, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட மாவட்ட கல்வி அலுவலர் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கித் தருவதாக கூறியதின் பேரில், பழைய பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டது. தற்போது நிதி இல்லை என்று கூறுவது வேதனை அளிக்கிறது என்றார்.

வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அக்ஸீலியம் பெலிக்ஸிடம் கேட்டபோது, வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக பழைய பள்ளிக் கட்டடத்தை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கித் தரவில்லை. அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்றார்.

இங்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.