உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கோயில் முகப்பு புதன்கிழமை அகற்றப்பட்டது.
கூவாகம் கிராமத்தில் நெடுஞ்சாலை புறம்போக்கு நிலத்தில் எல்லைகாளியம்மன் கோயில் அமைத்து மேற்படி கூவாகம் கிராமத்தினர் வழிபாடு செய்து வந்தனர். இந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்ததுடன், வழிபாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதுதொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, புதன்கிழமை வட்டாட்சியர் எஸ்.பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கோயில் முகப்பை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அகற்றினர். இதன் மூலம் கிராமத்தினர் வழிபாடு செய்யும் இடம் தனியார் வசமிருந்து மீட்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது திருநாவலூர் காவல் ஆய்வாளர் (பொ) ஷாகுல் அமீது, திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் ஜோகிந்தார், திருநாவலூர் காவல் ஆய்வாளர் தவமணி, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் மணிமொழி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.