விழுப்புரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.
இந்தக் கூட்டம், மாவட்டத் தலைவர் வே.ராமலிங்கம் தலைமையில், மாவட்டச் செயலர் எம்.கண்ணன், மாவட்ட இணைச் செயலர்கள் ஜனனி.மகாலிங்கம், ம.விசய்ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
கூட்டத்தில் வணிகத்தின் இன்றைய நிலை, சங்க வளர்ச்சிப் பணிகள், ஜி.எஸ்.டி. ஒழிப்பு ஆகியவை குறித்து, மாநிலத் தலைவர் த.வெள்ளையன் , பொதுச் செயலர் கே.தேவராஜ் ஆகியோர் பேசுகின்றனர். ஆகவே, கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் தவறாமல் கலந்துகொண்டு, நமது வாழ்வாதாரமாகிய வணிகத்தைக் காத்துக் கொள்ள வேண்டும் என சங்கராபுரத்தைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.