எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இன்று வணிகர் பேரவை பொதுக் குழு: மாநிலத் தலைவர் த.வெள்ளையன் பங்கேற்பு

விழுப்புரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 3:05 am

DIN

விழுப்புரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 9) நடைபெறுகிறது.
இந்தக் கூட்டம், மாவட்டத் தலைவர் வே.ராமலிங்கம் தலைமையில், மாவட்டச் செயலர்  எம்.கண்ணன், மாவட்ட இணைச் செயலர்கள் ஜனனி.மகாலிங்கம், ம.விசய்ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
    கூட்டத்தில் வணிகத்தின் இன்றைய நிலை, சங்க வளர்ச்சிப் பணிகள், ஜி.எஸ்.டி. ஒழிப்பு ஆகியவை குறித்து,  மாநிலத்  தலைவர்  த.வெள்ளையன் , பொதுச்  செயலர்  கே.தேவராஜ்  ஆகியோர்  பேசுகின்றனர். ஆகவே, கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் தவறாமல் கலந்துகொண்டு, நமது வாழ்வாதாரமாகிய வணிகத்தைக் காத்துக் கொள்ள வேண்டும் என சங்கராபுரத்தைச்  சேர்ந்த  மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.