கந்துவட்டி கொடுமை: ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி அருகே அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.


கள்ளக்குறிச்சி அருகே அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் ராமசாமி (60). உப்பு வியபாரி. இவர், இதே ஊரில் நடுத் தெருவில் வசித்து வரும் அழகப்பன் மகன் சின்னதம்பியிடம் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினாராம்.
இந்த நிலையில், தற்போது வட்டியும், முதலுமாகச் சேர்த்து ரூ. ஒரு லட்சம் தர வேண்டும் என ராமசாமியிடம் சின்னத்தம்பி கேட்டதுடன், அவருக்கு மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் ராமசாமி புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து சின்னத்தம்பியை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...