வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

த.மா.கா. மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்

விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 4:21 am

தினமணி

விழுப்புரத்தில் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி.தசரதன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் கே.எஸ்.ஹரிபாபு வரவேற்றார். மாநில நிர்வாகிகள் வி.எஸ்.சண்முகம், அதையூர் பாண்டியன், ஆர்.எஸ்.ஜெயபாலன், ஜெயமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.என்.நத்தர்மொய்தீன், மாவட்டப் பொதுச் செயலர் ஆர்.எஸ்.ரஞ்சித்குமார், மாவட்டச் செயலர் ஏ.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாநில துணைத் தலைவர், முன்னாள் எம்பி பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். திருச்சியில் நடைபெறவுள்ள கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கட்சியினரை அதிகளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
 கட்சி உறுப்பினர் சேர்க்கைப் பணியை விரைவுப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் பணியாற்ற ஆயத்தப் பணிகளை செய்யவேண்டும். நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது குறித்து கட்சியினரிடம் கருத்து கேட்கப்பட்டது.
 மாவட்ட நிர்வாகிகள் ஜெயராஜ், இசைமாறன், பழனி, கிருஷ்ணராஜ், சங்கர், சங்கரராமன், ஜெயதேவன், வட்டாரத் தலைவர்கள் ராஜேந்திரன், ராஜசேகர், பாண்டியன், செல்வராஜ், காமராஜ், செந்தில், சாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்டப் பொருளாளர் சதீஷ்பாபு நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.