திருக்கோவிலூர் அருகே அருணாபுரம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
513-ஆவது பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு கூத்தாண்டவர் கரக உற்சவம், திருநங்கைகள், பொதுமக்கள் தாலிக் கட்டுதல் நிகழ்வு, திருமண கோலத்தில் இந்திர விமானத்தில் திருத்தேர் பவனி ஆகியவை நடைபெற்றன.
இதையடுத்து, புதன்கிழமை காலை 9 மணிக்கு கூத்தாண்டவருக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. யுத்த கோலத்தில் தேரை வடம் பிடித்து இழுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
தேரோட்டத்தின்போது, மேளதாளத்துடன் திருநங்கைகள் நடன நிகழ்வு நடைபெற்றது. தேர், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாலை 5 மணியளவில் நிலையை அடைந்தது.
பின்னர், மாலை 5.30 மணியளவில் கூத்தாண்டவர் களபலி உற்சவமும் (அரவாணிகள் திருவிழா), இரவு 10 மணிக்கு கூத்தாண்டவர் இந்திர விமானத்தில் காட்டுக் கோயிலுக்குச் செல்லும் நிகழ்வும் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர். அரகண்டநல்லூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு காட்டுக் கோயிலில் தருமர் பட்டாபிஷேகம் நிகழ்வு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






